சுடச்சுட

  

  "தொழில்முனைவோர் தொழில் தொடங்க விரைவாக கடன் வசதி'

  By புதுச்சேரி,  |   Published on : 13th September 2016 09:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் தொழில்முனைவோர் எளிதாகத் தொழில் தொடங்கத் தேவையான உதவிகள் மேற்கொள்ளப்படும் என பிப்டிக் நிறுவனம் அறிவித்துள்ளது.
   புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவித்த புதிய தொழிற்கொள்கையை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து, பிப்டிக் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
   பிப்டிக் தலைவர் இரா. சிவா தலைமையில் நடந்த கூட்டத்தில் பிப்டிக் மேலாண் இயக்குநர் கரிகாலன், பொதுமேலாளர் ஆதிமூலம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
   புதுச்சேரியில் புதிய தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கவும், தற்போதுள்ள முதலீட்டாளர்களை தக்கவைக்கவும், புதிய தொழிற்சாலைகளை தொடங்கிட அனைத்து உள்கட்டமைப்பு வசதி மற்றும் கடன் வசதி செய்து தர உரிய ஏற்பாடுகளை விரைவாக செய்வது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
   மேலும் புதிய தொழில் கொள்கையில் தெரிவிக்கப்பட்ட தொழிற்சாலைகளை நிறுவி, தொழில் முறை மூலம் அளிக்கவுள்ள சலுகைகள் மற்றும் மானியங்கள் முதலியவைகளை தொழில் முதலீட்டாளர்கள் பெற ஊக்குவிக்கவும் ஆலோசிக்கப்பட்டது.
   போலகம் தொழிற்பேட்டை: இதுமட்டுமல்லாமல் பிப்டிக் வசம் உள்ள காரைக்கால் போலகம் தொழிற்பேட்டையில் தற்போது தொழில் முனைவோர்களுக்காக இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
   புதுச்சேரி பிராந்தியத்தில் சேதராப்பட்டு, கரசூர் பகுதியில் புதிய தொழிற்பேட்டை விரைவாக அமைக்க பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தொழிற்பேட்டைகளில் ஒதுக்கீடு பெற விருப்பம் உள்ள தொழில் முனைவோர்கள் பிப்டிக் நிறுவனத்தை அணுகலாம். மேலும் பிப்டிக் நிறுவனத்தின் மூலம் தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்க கடன்பெறுவதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்தி விரைவாக கடன் வசதி செய்திடவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai