சுடச்சுட

  

  பக்ரீத், ஓணம் பண்டிகை: புதுவை ஆளுநர், முதல்வர் வாழ்த்து

  By புதுச்சேரி,  |   Published on : 13th September 2016 09:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு துணைநிலை ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
   துணைநிலை ஆளுநர் கிரண்பேடி: பக்ரீத் பண்டிகை நபிகள் நாயகத்தின் தியாகம் மற்றும் அவர் வழங்கிய பெருந்தன்மை, கொடைத்தன்மை, நல்லிணக்கம், சகோதரத்துவம் போன்றவற்றை உலகுக்கு எடுத்துக் கூறுகிறது. பக்ரீத் பண்டிகை நன்னாளில், நமது சகோதரர்களின் முன்னேற்றத்துக்கு துணைநிற்போம். புதுச்சேரி யூனியன் பிரதேச மக்களுக்கு பக்ரீத் வாழ்த்துகள்.
   முதல்வர் வி.நாராயணசாமி: பக்ரீத் திருநாளில் மானுட சமுதாயத்தின் மேன்மைக்காக பாடுபட்ட நபிகளாரின் தியாகப்பண்புகளை நினைத்து அவர் காட்டிய உன்னதமான வழியில் மனிதநேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபட வேண்டும். சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கம் தழைக்க இஸ்லாமிய சகோதரர்களுக்கு பக்ரீத் நன்னாள் வாழ்த்துகள்.
   பேரவைத் தலைவர் வி.வைத்திலிங்கம்: தியாகம் செய்யும் மனப்பக்குவத்தை அனைவரும் பெற வேண்டும் என்பது பக்ரீத் பண்டிகை மூலம் உணர்த்தப்படுகிறது. நபிகளின் தியாகத்தையும், போதனைகளையும் பின்பற்றி நற்பண்புகளை வாழ்வில் கடைப்பிடிக்க அனைவரும் சபதம் ஏற்க வேண்டும்.
   ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.பி.: தியாகமும், பக்தியும் உண்மையான உயர்வுக்கு வழி வகுக்கும் என்பதை நிரூபித்துக் காட்டும் பெருவிழா பக்ரீத் பண்டிகை. அர்ப்பணிப்பு உணர்வு ஒன்றே மனித வாழ்வின் தெய்வீக நிலை என்பதையும் இப்பண்டிகை உணர்த்துகிறது. இத் திருநாளில் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு பக்ரீத் நல்வாழ்த்துகள்.
   இரா.சிவா எம்.எல்.ஏ.: நபிகள் நாயகத்தின் போதனையை நினைவில் கொண்டு சாதி, மதம் பேதம் பாராமல் அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவடனும் வாழ இந்த நாளில் உறுதி ஏற்போம். அனைவரும் மற்றவரிடத்தில் அன்பு மகிழ்ச்சி, அர்ப்பணிப்பு, ஆகியவை கொண்டிருக்க வேண்டும்.
   ஓணம் வாழ்த்து
   ஓணம் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
   ஆளுநர் கிரண்பேடி: கேரளத்தில் கொண்டாடப்படும் ஓணம் திருநாள் நமது பாரம்பரிய கலாசாரத்தின் செழுமைக்கு எடுத்துக்காட்டாகும். புதுவையின் பிராந்தியமான மாஹேயிலும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் புதுச்சேரி மக்களுக்கு ஓணம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
   முதல்வர் நாராயணசாமி: திருவோணத்தன்று மலையாள சமூகத்தினர் புத்தாடை அணிந்து வீடுகளை அலங்கரித்து மகாபலி மன்னர் வருவார் என நினைத்து அறுசுவை உணவுகளை படைப்பர்.
   இதுபோன்ற பண்டிகைகள் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை பேணிக்கும் என்பதில் ஐயமில்லை.
   ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.பி.: தன்னிடம் வரம் கேட்ட இறைவனுக்கு தன்னையே அர்ப்பணித்த மகாபலி சக்கரவர்த்தியின் தியாகத்தை உணர்த்துகிறது ஓணம் பண்டிகை.
   இப்பண்டிகையை கொண்டாடும் மலையாள மக்களின் வாழ்வில் வசந்தம் வீச, எல்லோர் உள்ளங்களிலும் உவகைப் பெருக வாழ்த்துகள்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai