சுடச்சுட

    

    பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு மேல்நிலைப் பள்ளி என்எஸ்எஸ் மாணவியர் சனிக்கிழமை சிரமதானப்பணி மேற்கொண்டனர்.
     கடந்த வாரம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, பாகூரை அடுத்த சேலியமேட்டில் சிரமதானப் பணித் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது மாணவியரிடம் பேசிய ஆளுநர் கிரண்பேடி, ஒவ்வொரு சனிக்கிழமையும் காலையில் 2 மணி நேரம் பொது இடங்களில் சிரமதானப் பணியை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இதன்படி பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசுப் பள்ளி மாணவியர் 25 பேர் மற்றும் பாகூர், பாகூர்பேட் பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சனிக்கிழமை சிரமதான துப்புரவுப் பணியை மேற்கொண்டனர். என்எஸ்எஸ் திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில், பள்ளி அருகே உள்ள சாலைப் பகுதிகளில் துப்புரவுப் பணி மேற்கொண்டு சுத்தம் செய்தனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai