சுடச்சுட

  

  புதுவையில், இரு வேறு சம்பவங்களில் பழ வியாபாரி உள்ளிட்ட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
   புதுவை வில்லியனூர் சுந்தரமூர்த்தி விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (35). சென்னையில் தங்கி, பழ வியாபாரம் செய்து வந்தார். அவ்வப்போது வீட்டுக்கு வந்து செல்வாராம்.
   சில நாள்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த ராஜேந்திரன், சென்னைக்கு மீண்டும் செல்லாமல், மது குடித்துவிட்டு புதுவையிலேயே இருந்து வந்தாராம்.
   இதே போல ஞாயிற்றுக்கிழமை இரவும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
   இதனை அவரது மனைவி நாகலட்சுமி கண்டித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த ராஜேந்திரன், அனைவரும் தூங்கிய பிறகு, புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வில்லியனூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
   கொத்தனார் தற்கொலை: புதுவை லாஸ்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (59). கொத்தனார். மதுப்பழக்கமுடைய இவர், வேலைக்கு சரிவர செல்லவில்லையாம். இதன் காரணமாக குடும்பத்தில் எழுந்த பிரச்னையால், விரக்தியடைந்த ஹரிகிருஷ்ணன் வீட்டு மொட்டை மாடியில் தூக்கு போட்டு ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
   லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai