சுடச்சுட

  

  புதுச்சேரியிலிருந்து சந்திரகாச்சிக்கு சுவிதா சிறப்பு ரயில்

  By புதுச்சேரி,  |   Published on : 13th September 2016 09:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் வழியாக சந்திரகாச்சிக்கு சுவிதா சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படுகிறது.
   இதுதொடர்பாக தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
   புதுச்சேரி-சந்திரகாச்சி சுவிதா சிறப்பு ரயில் (எண்.82630) வரும் அக்டோபர் 8 மற்றும் 15-ஆம் தேதிகளில் இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு, அக்டோபர் 10, 17 தேதிகளில் மாலை 4.30 மணிக்கு சென்றடையும். இதில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட குளிரூட்டப்பட்ட பெட்டி-1, மூன்றாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட குளிரூட்டப்பட்ட பெட்டி-1, தூங்கும் வசதி கொண்ட 7 பெட்டிகள், இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் 6, சரக்குப் பெட்டி, உள்ளிட்டவை இணைக்கப்பட்டிருக்கும்.
   விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கோல், சிராலா, தெனாலி, விஜயவாடா, எலூரு, தாடேபள்ளிகூடம், ராஜமுந்திரி, சாமல்கோட், துவ்வாடா, விஜயநகரம், ஸ்ரீகாகுளம் ரோடு, பலாசா, பிரமாபூர், குர்தா ரோடு, புவனேஸ்வர், கட்டாக், பத்ரக், பாலசோர், கரக்பூர் ரயில் நிலையங்களில் சுவிதா ரயில் நின்று செல்லும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai