சுடச்சுட

  

  புதுச்சேரி வேளாண்மைத் துறை சார்பில் மண் மாதிரி ஆய்வு சிறப்பு முகாம்கள் புதன்கிழமை தொடங்குகிறது.
   இதுதொடர்பாக கூடுதல் வேளாண் இயக்குனர் ரவிபிரகாசம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
   தேவைக்கு அதிகமாக உரமிடுதலை தவிர்க்கவும், மண் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும் மண்ணின் தரத்தை உயர்த்தவும், மண் வள அட்டை திட்டம் மத்திய அரசால் பரிந்துரை செய்யப்படுகிறது.
   அதன்படி, புதுவை மாநிலத்தில் 2002ஆம் ஆண்டிலிருந்து இது வரை 25,199 அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதை முறையாக பயன்படுத்தும் போது மண் நலமானது கண்காணிக்கப்பட்டு, காலப்போக்கில் அதன் தரம் மேம்படுத்தப்பட்டு (மண், நீர், மண் உயிரியல் பண்புகள்) விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது.
   இதன் நோக்கமானது, வேதியியல் பிரிவின் அலுவலர்கள் கொண்ட நான்கு குழுக்களின் மூலம் செப்.14-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை ஒதியம்பட்டு, திருக்காஞ்சி, அரியூர், பாகூர், கரையாம்புத்தூர், சேலியமேடு, கன்னியகோயில், தவளக்குப்பம், அரியாங்குப்பம், காட்டேரிக்குப்பம், சுத்துக்கேணி, திருக்கனூர், சோரப்பட்டு, மதகடிப்பட்டு, தொண்டமாநத்தம், கூடப்பாக்கம், கரிக்கலாம்பாக்கம், பண்டசோழ நல்லூர் மற்றும் கரியமாணிக்கம் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் மண் மாதிரிகள் எடுக்கப்பட உள்ளது.
   இம்மண் மாதிரி சிறப்பு முகாம் அந்தந்த உழவர் உதவியக அதிகாரிகளின் உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த முகாமில் விவசாயிகள் கலந்து கொண்டு, தங்களின் நிலங்களில் மண் மாதிரி எடுத்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai