சுடச்சுட

  

  முதல் காலாண்டில் என்எல்சி நிகர லாபம் ரூ.352 கோடி

  By நெய்வேலி,  |   Published on : 13th September 2016 09:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  என்எல்சி இந்தியா நிறுவனம் 31.6.2016 அன்றுடன் முடிவடைந்த நிகழ் நிதியாண்டின் (2016-17) முதல் காலாண்டில் வரிக்கு முன் ரூ.352.88 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
   இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
   நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் என்எல்சி நிறுவனம் ரூ.1,880.37 கோடி வருமானம் ஈட்டியுள்ளது.
   இது கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய வருவாயான ரூ.1,843.74 கோடியைவிட ரூ.36.63 கோடி (1.99 சதவீதம்) அதிகமாகும்.
   நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில், இந்த நிறுவனம் வரிக்கு முன் ரூ.352.88 கோடி நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
   இது கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில்
   ஈட்டிய ரூ.553.48 கோடியைவிட ரூ.200.60 கோடி குறைவாகும்.
   இந்த காலாண்டில் மின்பகிர்மானக் கழகங்கள் 349.45 மில்லியன் யூனிட் மின்சாரத்தை திரும்ப ஒப்படைத்துள்ளன.
   இது சென்ற நிதியாண்டின் முதல் காலாண்டில், திரும்ப ஒப்படைத்த 103.09 மில்லியன் யூனிட் மின்சாரத்தை விட 246.36 மில்லியன் யூனிட் அதிகமாகும்.
   இந்த காலாண்டில் இரண்டாம் அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் மின் உற்பத்தி குறைந்ததும், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பர்சிங்சர் அனல்மின் நிலையங்களில் நிலையான மின்உற்பத்தி பெற தாமதமானதாலும் நிறுவனத்தின் லாபம், சென்ற நிதியாண்டின் முதல் காலாண்டில் பெற்ற லாபத்தை விட குறைந்துள்ளது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai