சுடச்சுட

    

    விநாயகர் சிலை கரைத்தபோது மாயமான இளைஞர் சடலமாக மீட்பு

    By புதுச்சேரி  |   Published on : 13th September 2016 09:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் விநாயகர் சிலையை படகில் கொண்டு சென்று கடலில் கரைத்த போது, நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞரின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
     விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, புதுச்சேரியில் வீராம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கடலில் கரைக்கப்பட்டன.
     வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பிரசாந்த் (21) என்பவரும் கடலில் சிலையை கரைக்க, அப்பகுதியினருடன் படகில் சென்றார். அப்போது, படகு கவிழ்ந்து கடலில் தவறி விழுந்த அவர், நீரில் மூழ்கி காணாமல் போனார்.
     இந்த நிலையில் வம்பாகீரப்பாளையம் கடற்கரையில் அவரது உடல் கிடப்பதாக வந்த தகவலின் பேரில் போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டனர். இது குறித்து ஒதியஞ்சாலை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai