சுடச்சுட

  

  அச்சக உரிமையாளர் வீட்டில் 7 பவுன் நகைகள் திருட்டு

  By புதுச்சேரி,  |   Published on : 14th September 2016 09:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை அருகே அச்சக உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகை மற்றும் பணம் திருடுபோனது. இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
   திருபுவனை அடுத்த கலிதீர்த்தாள்குப்பத்தைச் சேர்ந்தவர் யாசில்கான். மதகடிப்பட்டில் அச்சகம் நடத்தி வருகிறார்.
   இவர், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊரான கரியமாணிக்கம் பகுதிக்கு திங்கள்கிழமை காலை குடும்பத்துடன் சென்றார். இந்த நிலையில் அவரது வீட்டு முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டுள்ளதாக, செவ்வாய்க்கிழமை யாசில்கானுக்கு பக்கத்துக்கு வீட்டுக்காரர் தகவல் தெரிவித்துள்ளார்.
   உடனடியாக வீடு திரும்பிய யாசில்கான் உள்ளே சென்று பார்த்தபோது, அலமாரி உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.13 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோயிருந்தது தெரியவந்தது.
   இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸார் விரல்ரேகை நிபுணர்களுடன் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai