Enable Javscript for better performance
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து விசிக சாலை மறியல்; 115 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து விசிக சாலை மறியல்; 115 பேர் கைது

    By புதுச்சேரி,  |   Published on : 14th September 2016 09:09 AM  |   அ+அ அ-   |    |  

    கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 115 பேர் கைது செய்யப்பட்டனர்.
     கர்நாடகத்தில் காவிரி நீர் பிரச்னை தொடர்பாக கன்னட அமைப்புகளை சேர்ந்தவர்கள் தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். சொகுசு பேருந்து, லாரிகள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன.
     இந்தப் பிரச்னையில் கர்நாடக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நீர் பிரச்னைக்கு மத்திய அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி சுப்பையா சிலை சிக்னல் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சாலை மறியல் நடந்தது.
     தலைமை முதன்மைச் செயலர் தேவ.பொழிலன் தலைமை வகித்தார். அமைப்புச் செயலர் அமுதவன், பொருளர் தமிழ்மாறன், தலைமை நிலையச் செயலர் செல்வநந்தன், தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலர் அரிமா தமிழன், தொகுதிச்செயலர் செழியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கன்னட அமைப்புகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
     சாலை மறியலில் ஈடுபட்ட 115 பேரை உருளையன்பேட்டை போலீஸார் கைது செய்தனர்.
     
     

    kattana sevai