சுடச்சுட

    

    கர்நாடகத்தில் தமிழர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: பாஜக

    By புதுச்சேரி,  |   Published on : 14th September 2016 09:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தில் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என புதுவை மாநில பாஜக தலைவர் ஆர்வி.சாமிநாதன் வலியுறுத்தி உள்ளார்.
     அவர் வெளியிட்ட அறிக்கை: காவிரி பிரச்னையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு நீண்ட ஆய்வுகள் மற்றும் விசாரணைகளுக்குப் பிறகே தமிழகத்துக்குத் தண்ணீர் தர உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
     அதுபோல புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசும் காரைக்கால் பகுதிக்கு தண்ணீர் திறந்துவிட கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இதனை உணர்ந்து கர்நாடக அரசு செயல்பட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வன்முறையை தூண்டிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அனைத்து நதிகளையும் இணைத்தால் தான் நதிநீர் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என தெரிவித்துள்ளார் சாமிநாதன்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai