சுடச்சுட

  

  புதிய தொழில்கொள்கையை விமர்சிப்பதா? முன்னாள் எம்.பி.க்கு காங்கிரஸ் கண்டனம்

  By புதுச்சேரி,  |   Published on : 14th September 2016 09:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை அரசு அறிவித்துள்ள புதிய தொழில்கொள்கையை அரசியல் உள்நோக்கத்துடன் அதிமுக முன்னாள் எம்.பி. ராமதாஸ் விமர்சிப்பதாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
   இதுதொடர்பாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஏவி.வீரராகவன் வெளியிட்ட அறிக்கை: புதுவை மாநில அதிமுக இணைச் செயலரும், முன்னாள் எம்பியுமான ராமதாஸ், முதல்வர் நாராயணசாமி அறிவித்த தொழில்கொள்கையை, புதிய பாட்டிலில் பழைய மது என விமர்சித்துள்ளார்.
   காங்கிரஸ் அரசின் தொழில்கொள்கையை விமர்சனம் செய்வதற்கு முன்பு முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தமிழக அரசின் தொழில்கொள்கையை சுயவிமர்சனம் செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.
   முன்னாள் எம்.பி. ராமதாஸ் அரசியல் உள்நோக்கத்தோடு உண்மைக்கு புறம்பாக செய்கிற விமர்சனம் புதுவை மாநில மக்களிடம் எடுபடாது. முதல்வர் நாராயணசாமியின் தொழில்கொள்கையை இந்திய தொழில் முதலீட்டாளர்கள் கூட்டமைப்பு பாராட்டி உள்ளது. தலைமையிடம் நல்ல பெயர் எடுப்பதற்காக தொழில்கொள்கையை விமர்சித்துள்ளார் என தெரிவித்துள்ளார் வீரராகவன்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai