சுடச்சுட

    

    மாநிலம் முழுவதும் அரசின் நூறு நாள் சாதனை விளக்கக் கூட்டம்: காங்கிரஸ் செயற்குழு தீர்மானம்

    By புதுச்சேரி,  |   Published on : 14th September 2016 09:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை மாநிலம் முழுவதும் பட்ஜெட் மற்றும் 100 நாள்கள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், தெருமுனைப் பிரசாரம் நடத்துவது என மாநில காங்கிரஸ் கமிட்டி செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறறப்பட்டது.
     புதுச்சேரியில், காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. மாநிலத் தலைவரும் அமைச்சருமான ஏ.நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்வர் வி.நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொகுதி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
     கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மற்றும் 100 நாள்கள் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
     கூட்டத்தில், சோனியாகாந்தி, ராகுல்காந்தி, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில், காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு 100 நாள்களில் மக்களுக்கான சாதனை திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. சட்டப்பேரவை அமைதியாகவும், செம்மையாகவும் நடைபெற
     உறுதுணையாக இருந்த பேரவைத் தலைவர் வைத்திலிங்கம், துணைத் தலைவர் சிவக்கொழுந்து மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டு தெரிவிப்பது,
     தேர்தல் அறிக்கையில் அறிவித்தத் திட்டங்களை செயல்படுத்திய மாநில அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவிப்பது, அமைச்சரவை செயல்பாட்டுக்கு மாநில காங்கிரஸ் துணை நிற்பது,
     வரவுள்ள இடைத் தேர்தலில் முதல்வர் நாராயணசாமி போட்டியிடும் தொகுதியில் ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றிக்கு பாடுபடுவது,
     காங்கிரஸ் அரசின் பட்ஜெட் மற்றும் 100 நாள்கள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள், தெருமுனைப்பிரசாரத்தை மாநிலம் முழுவதும் மேற்கொள்வது,
     கர்நாடகத்தில் தமிழர்கள் மீதான வன்முறைகளை கடுமையாக அடக்க வேண்டும், உரிய பாதுகாப்பு தர வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai