சுடச்சுட

  

   புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி நிறுவனர் கேசவன் 5-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திங்கள்கிழமை ரத்ததான முகாம நடைபெற்றது.
   சிவப்பு நாடா சங்கம், விழுப்புரம் அரிமா சங்கம், புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் இணைந்து நடத்திய ரத்ததான முகாமை கல்லூரி தலைவர் எம்.தனசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.வி.சுகுமாறன், செயலர் கே.நாராயணசாமி முன்னிலை வகித்தனர்.
   அரிமா சங்கத் தலைவர் எம்.சாம்ராஜ், எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க இயக்குநர் ஜெயந்தி பங்கேற்று ரத்த தானத்தின் அவசியம் குறித்து விவரித்தனர். மாநில என்எஸ்எஸ் அலுவலர் பி. குழந்தைசாமி, ஒருங்கிணைப்பாளர் பி.தேவபாலன் வாழ்த்திப் பேசினர். 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் ரத்ததானம் செய்தனர்.
   கல்லூரி சிவப்பு நாடா சங்க அலுவலர் டி.கருணாகரன் நன்றி கூறினார்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai