சுடச்சுட

  

  ஆட்டோ கட்டண நிர்ணயம் கோரி கையெழுத்து இயக்கம்

  By புதுச்சேரி  |   Published on : 15th September 2016 09:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்யக் கோரி, கையெழுத்து இயக்கத்தை ஆட்டோ தொழிலாளர்கள் புதன்கிழமை தொடங்கினர்.
   புதுச்சேரியில் குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் ரூ.40-ம், கிலோ மீட்டருக்கு ரூ.20-ம் நிர்ணயிக்க வேண்டும், தமிழகத்தைப் போல் ஜி.பி.ஆர்.எஸ். ஆட்டோ மீட்டரை இலவசமாக வழங்க வேண்டும், ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்ய அதிகாரிகள், தொழிற்சங்க, மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட முத்தரப்புக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற
   21-ஆம் தேதி அடையாள வேலை நிறுத்தம் செய்ய புதுச்சேரி மாநில அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டு போராட்டக்குழு முடிவெடுத்துள்ளது.
   இதற்கு ஆதரவு திரட்டும் வகையில், புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகில் புதன்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சிவா கையெழுத்திட்டு, தொடங்கி வைத்தார்.
   ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தை சேர்ந்த சேதுசெல்வம், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த சீனுவாசன், அப்துல்கலாம் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தை சேர்ந்த பிராங்க்ளின், எல்பிஎப் அமைப்பை சேர்ந்த சங்கர் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
   ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்க முடிவெடுத்துள்ள போராட்டக் குழுவினர் 19-ஆம் தேதி வரை பல்வேறு தரப்பினரிடம் கையெழுத்துப் பெறுகின்றனர். பின்னர் 21-ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்து ஏ.எப்.டி. திடலில் இருந்து பேரணியாக வந்து முதல்வரை சந்தித்து ஒரு லட்சம் கையெழுத்து மனுவை அளிப்போம் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai