Enable Javscript for better performance
இயற்கை-உயிரி தொழில்நுட்ப முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி: விவசாயிகளுக்கு அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    இயற்கை-உயிரி தொழில்நுட்ப முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி: விவசாயிகளுக்கு அழைப்பு

    By புதுச்சேரி,  |   Published on : 15th September 2016 10:06 AM  |   அ+அ அ-   |    |  

    இயற்கை மற்றும் உயிரி தொழில் நுட்ப முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி முறையை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும் என புதுச்சேரி வேளாண்மை துறை அறிவித்துள்ளது.
     பாரம்பரிய நெல் விதைகளான மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுணி, ஆத்தூர் கிச்சிலி சம்பா, காலா நமக், குதிரைவால் சம்பா போன்ற ரகங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
     நெல் விதைகளான மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுணி, ஆத்தூர் கிச்சிலி சம்பா, காலா நமக், குதிரைவால் சம்பா ரகங்களை உப்பு கரைசல், பீஜாமிர்த நேர்த்தி செய்யப்பட்ட 2-ம் கொம்பு விதைகள் சூடோமொனாஸ் மற்றும் மண்புழு உரம் இடப்பட்ட நாற்றங்காலில் விதையை இட வேண்டும்.
     பசுந்தாள் உரமான தக்கைப் பூண்டு விதைகளை நடவு வயலில் விதைக்கப்பட்டு 45-ம் நாளில் மடக்கி உழ வேண்டும்.
     மேலும் அடியுரமாக மண்புழு உரம் மற்றும் வேப்பம்
     பிண்ணாக்கு இடப்பட்ட வயலில் 15 நாள் வயதுடைய நாற்றுகள் வேளாண்துறை அறிவுறுத்தலின்படி 30ஷ்30 செ.மீ இடைவெளியில் ஒற்றை நாற்று நடவுமுறையில் நடவு செய்ய வேண்டும்
     இயற்கை வேளாண் மற்றும் உயிர் ஆற்றல் வேளாண் தொழில் நுட்ப முறையை கடைபிடிப்பதன் மூலம் குறைந்த செலவு, அதிக மகசூல் மற்றும் நச்சு தன்மை இல்லாத மருத்துவ குணங்கள் நிறைந்த பாரம்பரிய நெல் சாகுபடி செய்யலாம் என்று வேளாண்துறை அறிவுறுத்துகிறது.
     

    kattana sevai