சுடச்சுட

  

  காரைக்காலில் இன்று காணொலி மூலம் ஆளுநர் குறை கேட்பு

  By காரைக்கால்,  |   Published on : 15th September 2016 09:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்கால் மாவட்ட ஆட்சியரகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது :
   புதுச்சேரி துணை நிலை ஆளுநர், புதுச்சேரியில் தனது அலுவலகத்தில் தினமும் மாலை 5 முதல் 6 மணி வரை பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார். அதுபோல, வியாழக்கிழமை தோறும் காரைக்கால் மாவட்ட மக்களிடம் குறைகளை காணொலி மூலம் கேட்கிறார். இந்த நிகழ்வு வியாழக்கிழமை (15ஆம் தேதி) மாலை 5 முதல் 6 மணி வரை காரைக்கால் மாவட்ட மக்களின் குறைகளை காணொலி மூலம் காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் கேட்டறிய உள்ளார்.
   இந்த கூட்டத்தில், துணை நிலை ஆளுநரின் கவனத்துக்கு தங்களுடைய குறைகளை கொண்டு சென்று, அதற்கு தீர்வு காண இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். குறைகளை தெரிவிக்க விரும்புவோர், காலை 10 முதல் மாலை 4 மணி வரை ஆட்சியர் அலுவலகத்தில் முன்பதிவு செய்துகொள்ளவேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai