சுடச்சுட

    

    தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் அங்காடி தொடக்கம்

    By காரைக்கால்,  |   Published on : 15th September 2016 09:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்கால் தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் அங்காடி மற்றும் பார்சல் பேக்கிங் மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
     தபால் துறையின் மூலம் மக்களுக்கான சேவைகளை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இதன் மூலம் தபால் பட்டுவாடா மட்டுமின்றி பல்வேறு சேவைகளை தபால் துறை அமல்படுத்திவருகிறது.
     இதன் ஒரு கட்டமாக, திருச்சி மண்டலத்தின் மூலம் காரைக்கால் தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் அங்காடி மற்றும் பார்சல் பேக்கிங் மையம் தொடங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தபால் நிலைய வளாகத்தில் செயல்படக்கூடிய இம்மையங்களை மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவர் சுவேந்து ஸ்வைன் கலந்துகொண்டு முதல் விற்பனையை தொடங்கிவைத்தார்.
     நிகழ்ச்சியில் அவர் பேசியது:
     அஞ்சல் அங்காடியில், பல்வேறு எழுத்தாளர்களின் புத்தகங்கள், ஸ்டேஷனரி பொருள்கள், போட்டோ காப்பி எடுத்துக்கொள்ளும் வசதி, விளையாட்டு, கல்வி, பக்தி விவரங்கள் அடங்கிய குறுந்தகடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பல்வேறு விற்பனை பொருள்களும் இடம்பெற்றுள்ளன.
     பொதுமக்கள் எந்தவொரு பார்சல் பொருள்களையும் தபால் நிலையத்திற்கே கொண்டுவந்து, இங்கேயே பேக்கிங் செய்துகொண்டு அனுப்பமுடியும் என்றார்.
     தபால் துறை அதிகாரிகள் கூறியது: வருங்காலத்தில் கங்கை நீர் விற்பனையும் செய்யப்படும். தபால் நிலையம் செயல்படும் நேரம் வரை இந்த சேவைகள் இருக்கும். திருச்சி தபால் மண்டலத்தில் திருச்சி, தஞ்சாவூருக்கு அடுத்தப்படியாக காரைக்காலில் இந்த சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. நாகப்பட்டினம் கோட்டத்தில் காரைக்காலில்தான் முதன்முதலாக தொடங்கப்பட்டுள்ளது என்றனர்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai