சுடச்சுட

  

  இரண்டு நாள்கள் பயணமாக புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி வியாழக்கிழமை தில்லி செல்கிறார்.
   கடந்த பேரவைத் தேர்தலில் போட்டியிடாமல் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசின் முதல்வராக நாராயணசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.
   இந்நிலையில் அவர் 6 மாதங்களுக்குள் இடைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக வேண்டும்.
   இந்நிலையில் நூறு நாள் ஆட்சியை நிறைவு செய்துள்ள முதல்வர் நாராயணசாமி, தான் போட்டியிடும் தொகுதி தொடர்பான அறிவிப்பை கட்சித் தலைமை அறிவிக்கும் என்று தெரிவித்திருந்தார். முதல்வருக்காக தனது பதவியை ராஜிநாமா செய்யத் தயாராக உள்ளதாக நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ. ஜான்குமார் தெரிவித்தார்.
   தில்லி பயணம்: இந்நிலையில் இரண்டு நாள்கள் பயணமாக முதல்வர் நாராயணசாமி தில்லி செல்கிறார். இதுதொடர்பாக கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
   கட்சித் தலைவர் சோனியா காந்தியை தில்லியில் சந்தித்து இடைத் தேர்தல் தொடர்பாக முதல்வர் நாராயணசாமி ஆலோசனை மேற்கொள்வார்.
   விரைவில் அவர் போட்டியிடும் தொகுதி தொடர்பாக இறுதிமுடிவு எடுக்கப்படும். மேலும், புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அமைச்சர்களையும் முதல்வர் சந்திப்பார் எனத் தெரிகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai