சுடச்சுட

  

  புதுவை காங்கிரஸின் 100 நாள் ஆட்சி சாதனை அல்ல, வேதனை: அதிமுக கருத்து

  By புதுச்சேரி,  |   Published on : 15th September 2016 09:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் காங்கிரஸின் 100 நாள் ஆட்சி சாதனை அல்ல, வெறும் வேதனை என சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
   அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
   புதுச்சேரி காங்கிரஸ் அரசு, தனது 100 நாள் ஆட்சிக் காலத்தில் பல்வேறு சாதனைகளை நிறைவேற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. இது சாதனையல்ல, வேதனை.
   தேர்தல் அறிக்கையில் மாநில அந்தஸ்து, ரூ.6,500 கோடி கடன் தள்ளுபடி, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை, மருத்துவக் கல்வி, முதுகலை பட்டமேற்படிப்பில் 50 சதவீத ஒதுக்கீடு, கல்விக் கடன் தள்ளுபடி, சென்டாக் மருத்துவ மாணவர்களுக்கு, ஒரே சீரான கட்டணம் உள்ளிட்ட 249 வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்திருந்தது. இவை நிறைவேறவில்லை.
   30 கிலோ அரிசி பல தொகுதிகளில் இன்னும் கிடைக்கவில்லை. முதியோர் உதவித்தொகை ரூ.5ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவித்தனர். ஆனால் ரூ.100 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. அறிவித்தபடி மின் கட்டண குறைப்பும் செய்யவில்லை. தாழ்த்தப்பட்டோருக்கான சிறப்புக் கூறு நிதியை ஒதுக்கவில்லை. 7 மேம்பாலங்கள் கட்டப்படும் என அறிவித்தனர். ஆனால், ஒரு பாலத்துக்குக் கூட நிதி ஒதுக்கவில்லை. மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தவில்லை.
   அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.300 என மத்திய அரசு நிர்ணயித்தும் புதுவையில் அதனை செயல்படுத்தவில்லை. தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு 50 சதவீத வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்ய சட்டம் எதுவுமில்லை.
   முந்தைய முதல்வர் மீது குறை கூறியே, தற்போதைய முதல்வர் தப்பித்து வருகிறார். ஏனாம் பிராந்திய வளர்ச்சித் திட்டத்துக்குத் தான் கடந்த 10 ஆண்டுகளாக முக்கியம் தருகின்றனர். அங்கு மத்திய அரசு திட்டங்களில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளன. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு எந்த சலுகைகளையும் காங்கிரஸ் அரசு தராமல் முட்டுக்கட்டை போடுகிறது என அன்பழகன்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai