Enable Javscript for better performance
மின் துறை ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்: தொமுச- Dinamani

சுடச்சுட

    

    மின் துறை ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்: தொமுச

    By புதுச்சேரி,  |   Published on : 15th September 2016 09:45 AM  |   அ+அ அ-   |    |  

    புதுச்சேரி மின்துறை ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த தொமுச கோரிக்கை விடுத்துள்ளது.
     இதுதொடர்பாக மின்துறை தொமுச பொதுச் செயலர் இள.மதிவாணன் தலைமையில் நிர்வாகிகள் முதல்வர் நாராயணசாமியிடம் புதன்கிழமை அளித்த மனு:
     நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் செப்டம்பர் மாதம் முதல் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் எனவும், ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான நிலுவைத் தொகை மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று தரப்படும் என அறிவித்த முதல்வர் நாராயணசாமிக்கு நன்றி.
     மேலும், மின்துறை தொழிலாளர்களுக்கு நீண்ட நாள் கோரிக்கைகளை பரிசீலித்து உடனே நிறைவேற்ற வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர்.
     கோரிக்கையை அரசு நிறைவேற்றும் என முதல்வர் நாராயணசாமி உறுதி கூறினார்.
     சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், வாழுமுனி, ராம்மோகன், பிரகாஷ், நந்தகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai