சுடச்சுட

    

    மின் துறை ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்: தொமுச

    By புதுச்சேரி,  |   Published on : 15th September 2016 09:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி மின்துறை ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த தொமுச கோரிக்கை விடுத்துள்ளது.
     இதுதொடர்பாக மின்துறை தொமுச பொதுச் செயலர் இள.மதிவாணன் தலைமையில் நிர்வாகிகள் முதல்வர் நாராயணசாமியிடம் புதன்கிழமை அளித்த மனு:
     நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் செப்டம்பர் மாதம் முதல் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் எனவும், ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான நிலுவைத் தொகை மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று தரப்படும் என அறிவித்த முதல்வர் நாராயணசாமிக்கு நன்றி. மேலும், மின்துறை தொழிலாளர்களுக்கு நீண்ட நாள் கோரிக்கைகளை பரிசீலித்து உடனே நிறைவேற்ற வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர்.
     கோரிக்கையை அரசு நிறைவேற்றும் என முதல்வர் நாராயணசாமி உறுதி கூறினார்.
     சங்க நிர்வாகிகள் செந்தில் குமார், வாழுமுனி, ராம்மோகன், பிரகாஷ், நந்தகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai