சுடச்சுட

  

  ரூ.3 கோடியில் கழிவுநீர் வாய்க்கால்கள் தூர் வாரும் பணி: முதல்வர் தொடங்கி வைத்தார்

  By புதுச்சேரி,  |   Published on : 15th September 2016 10:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி நகர மற்றும் புறநகரப் பகுதிகளில் நீர்ப்பாசனக் கோட்டத்துக்குள்பட்ட 43 கழிவுநீர் வாய்க்கால்களை, தூர்வாரும் பணியை முதல்வர் வி.நாராயணசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
   கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால், புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் நிகழாண்டில் பருவமழை தொடங்குவதற்குள் கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து 85 கி.மீ. நீளமுள்ள வாய்க்கால்களை ரூ.3 கோடி மதிப்பில் தூர் வாரி, பராமரிக்கும் பணியை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
   சட்டப்பேரவைத் தலைவர் வி.வைத்திலிங்கம், பொதுப்பணித் துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் பி.சுவாமிநாதன், நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் தாமரை புகழேந்தி, உதவிப் பொறியாளர் கோ.சேகர், இளநிலைப் பொறியாளர் ந.சிவப்பிரகாசம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai