சுடச்சுட

  

  அண்ணா பிறந்த நாள்: அரசியல் கட்சியினர் மரியாதை

  By  புதுச்சேரி,  |   Published on : 16th September 2016 11:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் அறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் வியாழக்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
   புதுச்சேரி அரசு செய்தி விளம்பரத் துறை சார்பில், அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஆர்.கமலக்கண்ணன், மு.கந்தசாமி, பேரவை துணைத் தலைவர் விபி.சிவக்கொழுந்து ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
   திமுக
   தெற்கு மாநில திமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா, பேரணி நடைபெற்றது.
   மாநில அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.
   திமுகவினர் ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். உருளையன்பேட்டை தொகுதி திமுக சார்பில் கோவிந்தசாலையில் நடைபெற்ற விழாவில், அமைப்பாளர் சிவா கலந்து கொண்டு, அண்ணா உருவப் படத்துக்கு மலர்துவி மரியாதை செலுத்தினார்.
   அவைத் தலைவர் சீத்தா வேதநாயகம், துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், அமுதாகுமார், பொருளாளர் குமாரவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் மாறன், தட்சிணாமூர்த்தி, வேலவன், சக்திவேல், வேலன், அருட்செல்வி, தொகுதிச் செயலாளர்கள் பங்கேற்றனர்.
   வடக்கு மாநில திமுக சார்பில், அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமையில் கட்சியினர் ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
   முன்னாள் முதல்வர் ஆர்வி.ஜானகிராமன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிபி.திருநாவுக்கரசு, மாநில அவைத் தலைவர் ஆர்.பலராமன், துணை அமைப்பாளர்கள், ஏகே.குமார்(எ)கிருஷ்ணன், பெல்லாரி (எ) கலியபெருமாள்சுந்தரி அல்லிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.
   அதிமுக
   அதிமுக சார்பில் நடைபெற்ற விழாவுக்கு மாநிலச் செயலாளர் பி.புருஷோத்தமன் தலைமை வகித்தார்.
   சட்டப்பேரவை அதிமுக தலைவர் அன்பழகன், எம்.எல்.ஏக்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.
   புதிய நீதிக்கட்சி சார்பில் மாநிலத் தலைவர் பொன்னுரங்கம் தலைமையில் அண்ணா பிறந்த நாள் விழா நடைபெற்றது. நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, காமராஜ், பொன் நடராஜன், தேவதூதன் உள்பட பலர் பங்கேற்றனர்.
   
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai