சுடச்சுட

  

  "என்.ஆர். காங்கிரஸ் மீது களங்கம் ஏற்படுத்த நாராயணசாமி முயற்சி'

  By  புதுச்சேரி,  |   Published on : 16th September 2016 11:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இடைத் தேர்தலுக்காக என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் முதல்வர் நாராயணசாமி ஈடுபட்டுள்ளார் என அக்கட்சியின் கொறடா என்எஸ்.ஜெயபால் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
   அவர் வெளியிட்ட அறிக்கை: என்ஆர். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள் சிலவற்றில் ரூ.100-ஐ உயர்த்தி விட்டு காங்கிரஸ் அரசு 100 நாள் சாதனை கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளது.
   மேட்டுப்பாளையத்தில் ஐடி பூங்கா, பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரியை தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக மாற்றுவது என எங்கள் கட்சி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையே மீண்டும் அறிவித்துள்ளனர்.
   நகர மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு புதிய தொலை நோக்கு திட்டங்கள் எதுமில்லை. வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு தரப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவில்லை.
   முதல்வர் நாராயணசாமி தான் சந்திக்க உள்ள இடைத்தேர்தலை மனதில் கொண்டு பழிவாங்கும் எண்ணத்தில் முந்தைய என்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு களங்கம் கற்பிக்க பொய்யான ஊழல் புகார்களை கூறி வருகிறார் என்று அதில் தெரிவித்துள்ளார் ஜெயபால்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai