சுடச்சுட

  

  காவல் துறையால் மீட்கப்பட்ட 225 சிறார்களுக்கு தொழில் திறன் பயிற்சி

  By புதுச்சேரி,  |   Published on : 16th September 2016 11:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காவல் துறையால் மீட்கப்பட்ட 225 சிறார்களுக்கு தொழில் திறன் பயிற்சியை முதல்வர் நாராயணசாமி புதன்கிழமை இரவு தொடங்கி வைத்தார்.
   புதுவை பிராந்தியத்தில் ஆதரவற்ற நிலையில் திரியும் குழந்தைகள், பள்ளிப் படிப்பை கைவிட்டோர் மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள் உள்ளதும் தெரியவந்தது.
   இக்குழந்தைகள் சமூக விரோதிகளிடம் சிக்காமல் இருக்கும் வகையில் புன்னகை என்ற திட்டம் காவல்துறையில் முதன்முதலாக நாட்டிலேயே தொடங்கப்பட்டது. இவர்களுக்கு தொழில் திறன் பயிற்சி அளிப்பதற்காக விவேகானந்த ஊரக சமுதாய கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
   கடந்த ஆண்டு 50 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு நல்ல வேலையிலும் சேர்ந்துள்ளனர்.
   அதன்படி, நிகழாண்டும் புன்னகை திட்டத்தில்
   400-க்கும் மேற்பட்ட சிறார்கள் காவல்துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 225 சிறார்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். மேலும், புன்னகை திட்ட கையேட்டையும் வெளியிட்டார். காவல்துறை இயக்குநர் சுனில்குமார் கெüதம் தலைமை வகித்தார். ஐஜி கண்ணன் ஜெகதீசன் முன்னிலை வகித்தார்.
   தொழிலாளர் துறை ஆணையர் இ.வல்லவன், குழந்தைகள் நலக்குழுத் தலைவர் வித்யாராம்குமார் மற்றும் ரோட்டரி சங்கம், விவேகானந்த ஊரக சமுதாய கல்லூரி நிர்வாகிகள்
   பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai