சுடச்சுட

  

  தமிழர்கள் மீது தாக்குதல்: மனித உரிமை ஆணையம் தலையிட கோரிக்கை

  By புதுச்சேரி,  |   Published on : 16th September 2016 11:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடக மாநிலத்தில் தமிழகர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தலையிட்டு விசாரிக்க புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கோரியுள்ளது.
   அதன் செயலாளர் கோ.சுகுமாரன் வெளியிட்ட அறிக்கை: கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டு வருவது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் தலைமையிலான குழு நேரில் சென்று விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளியான காட்சிகளே ஆதாரங்களாக உள்ளன.
   தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் நீதிபதி முருகேசனும், காவிரி பிரச்னையில் கர்நாடகத்தில் மனித உரிமை மீறல் நடந்துள்ளது எனக் கூறியுள்ளார்.
   தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் தலைமையிலான உயர்மட்டக்குழு நேரில் சென்று பாதிக்கப்பட்ட தமிழர்களிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார் சுகுமாரன்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai