சுடச்சுட

  

  நவராத்திரி திருவிழா: பொம்மைக் கண்காட்சி தொடக்கம்

  By புதுச்சேரி,  |   Published on : 16th September 2016 11:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு பொம்மை உற்பத்தியாளர்கள் சேவை தொழிலியல் கூட்டுறவு சங்கம் சார்பில், 22-ஆம் ஆண்டு கொலு பொம்மை கண்காட்சி ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயில் வளாகத்தில் புதன்கிழமை இரவு தொடங்கியது.
   28 நாள்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் ரூ.90 லட்சம் மதிப்புள்ள கொலு பொம்மைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. நிகழாண்டு ரூ.80 லட்சம் அளவிற்கு பொம்மைகள் விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
   இதில் 25 சதவீதம் தள்ளுபடி செய்து விற்பனை செய்யப்படுகிறது. கண்காட்சியில் வைபோக லட்சுமி, அறங்காத்த அம்மன், மேல்மலையனூர் அம்மன், வளைகாப்பு அம்மன், இராமாயணம் செட் வகைகள், நாச்சியார் கல் கருடர் உற்சவ பெருமாள், கிளி ஜோசியம் செட் மற்றும் சிறப்பு டெரக்கோட்டா விளக்கு வகைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai