சுடச்சுட

    

    நாய்கள் மர்மச் சாவு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    By புதுச்சேரி,  |   Published on : 16th September 2016 11:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    வில்லியனூர் அருகேயுள்ள ஆரியப்பாளையம் பகுதியில் நாய்கள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
     ஆரியபாளையம் பகுதியில் கடந்த நான்கு நாள்களாக துர்நாற்றம் வீசி வந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் சுற்று வட்டாரத்தில் சென்று பார்த்தபோது மர்மமான முறையில் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து கிடப்பது தெரியவந்தது.
     இதுகுறித்து பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
     போலீஸார் இறந்து கிடந்த நாய்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வில்லியனூர், ஆரியபாளையம், பைபாஸ் சாலை, சங்கராபரணி ஆற்றுப் பகுதி ஆகிய இடங்களில் இரவு நேரங்களில் சில நாள்களாக திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்குத் தடையாக இருக்கும் நாய்களுக்கு மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்றிருக்கக் கூடும் என காவல் நிலையத்தில் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai