சுடச்சுட

  

  பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டையும் இணைப்பது குறித்தும், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை ஒரு மாதம் முன்கூட்டியே அதாவது ஜனவரி மாதத்திலேயே கூட்டுவது குறித்தும் மத்திய அமைச்சரவை அடுத்த வாரம் முடிவெடுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
  "நீதி ஆயோக்' எனப்படும் மத்திய கொள்கைக் குழு உறுப்பினர் விவேக் தேவ்ராய் தலைமையிலான குழு சில மாதங்களுக்கு முன் அளித்த அறிக்கையில், இனி ரயில்வே பட்ஜெட்டையும் பொது பட்ஜெட்டையும் இணைத்து ஒன்றாக தாக்கல் செய்யலாம் என்று பரிந்துரைத்திருந்தது.
  இந்த இணைப்புக்கான நடைமுறைகளை இறுதி செய்வதற்காக ரயில்வே மற்றும் நிதித் துறை ஆகிய அமைச்சகங்களைச் சேர்ந்த உயரதிகாரிகளைக் கொண்ட 5 நபர் குழுவை மத்திய அரசு அமைத்தது.

  இந்தக் குழு தனது அறிக்கையை மத்திய நிதியமைச்சத்திடம் கடந்த 8-ஆம் தேதி சமர்ப்பித்தது. வருங்காலத்தில் பொது பட்ஜெட் அறிக்கையிலேயே ரயில் பட்ஜெட் விவரங்களை தனி இணைப்பாகச்சேர்க்கலாம் என்றும் அதில் அடுத்த நிதியாண்டுக்கான ரயில்வே துறைக்கான மானியம், செலவு, புதிய திட்டங்கள் குறித்த தகவல்களை இடம்பெறச் செய்யலாம் என்றும் ஐந்து நபர் குழு தனது

  அறிக்கையில் பரிந்துரைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
  அந்த அறிக்கையைப் பரிசீலித்து வரும் நிதியமைச்சகம், ரயில்வே துறைக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நடைமுறையை நீக்குவது குறித்து தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருவதாக

  அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த கட்டமாக, பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டையும் இணைப்பது குறித்தும், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை ஒரு மாதம் முன்கூட்டியே, அதாவது ஜனவரி மாதத்திலேயே தொடங்குவது குறித்தும் மத்திய அமைச்சரவை அடுத்த வாரம் முடிவெடுக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த ஆண்டு (2017) பிப்ரவரி மாதத்துக்கு பதிலாக, ஜனவரி 24-ஆம் தேதி கூட்டப்பட வாய்ப்புள்ளது. மேலும், நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரும் 15 நாள்களுக்கு முன்பே, அதாவது வரும் நவம்பர் 12-ஆம் தேதியே கூட்டப்படவும் வாய்ப்புள்ளது. திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி ஜிஎஸ்டி மசோதா நடைமுறைக்கு வருவதற்கு ஏதுவாக, அதன் துணைச் சட்டங்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்படுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
  தற்போது வரை, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் கூட்டப்படுவதே வழக்கமாக உள்ளது. இனி வரும் ஆண்டுகளில் ஜனவரி மாதமே மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நடைமுறை வழக்கத்துக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ஜனவரி 30-ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையும், 31ஆம் தேதி பட்ஜெட்டும் சமர்ப்பிக்கப்படும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai