சுடச்சுட

  

  பதவி விலக எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை: ஜான்குமார் எம்எல்ஏ

  By  புதுச்சேரி,  |   Published on : 16th September 2016 11:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பதவி விலகுவதற்காக தான் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை என நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார் தெரிவித்துள்ளார்.
   முதல்வர் நாராயணசாமி போட்டியிட ஏதுவாக ஜான்குமார் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து பேரவைத் தலைவர் வைத்திலிங்கத்திடம் பதவி விலகல் கடிதத்தை வியாழக்கிழமை அளித்தார்.
   பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
   எம்எல்ஏ பதவியை விட்டு விலக நான் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. பிரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு பணம் ஒரு பொருட்டே இல்லை. நான் பல கோடி ரூபாய் வாங்கியதாக புகார் கூறினர்.
   எனக்கு பணம் பெரிதல்ல. தொகுதியில் உள்ள தெருக்கோடி மக்கள் நலனே முக்கியம்.
   முதல்வர் நாராயணசாமி எனது தந்தை போன்றவர். காங்கிரஸ் கட்சி தேர்தலில் வென்றபோதே நெல்லித்தோப்பு தொகுதியில் பதவியை ராஜிநாமா செய்ய முடிவு செய்து விட்டேன்.
   சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆணையின்படி தற்போது
   எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துள்ளேன்.
   பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு தொடர்ந்து சேவை புரிவேன். வரும் அக்.1-ம் தேதி முதலே தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்வோம்.
   முதல்வர் நாராயணசாமியை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வேன். வரும் 2021 பேரவைத் தேர்தலில் நான் மீண்டும் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடுவேன். கட்சித் தலைமை எந்த உத்தரவிடுகிறதோ அதற்கு கட்டுப்படுவேன் என்றார் ஜான்குமார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai