சுடச்சுட

  

  பாண்டெக்ஸ் நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

  By  புதுச்சேரி,  |   Published on : 16th September 2016 11:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாண்டெக்ஸ் நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு சார்பில், தலைமை அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   நெசவாளர்களுக்கு மழை நிவாரணம் ரூ.3000 உயர்த்தித் தர வேண்டும், ஊக்கத்தொகை ரூ.10 ஆயிரத்தை அரசே முழுமையாக தர வேண்டும், பாண்டெக்ஸ் பிரதம நெசவாளர் சங்கங்களுக்கு நிதி வழங்கி அவற்றை பாதுகாக்க வேண்டும்.
   பாண்டெக்ஸ் ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க ரூ.1.5 கோடி செலுத்த வேண்டும், வங்கிக்கடன் ரூ.20 கோடியை ரத்து செய்ய வேண்டும், பணிநிறைவு பெற்ற ஊழியர்களுக்கு ஈட்டியவிடுப்பு ரொக்கம் நிலுவைத் தொகை வழங்க வேண்டும், அரசுத் துணிகளுக்கான உத்தரவுகளை குறித்த நேரத்தில் வழங்கி உற்பத்தி செய்யவும், பிரதம சங்கங்களுக்கு தடையின்றி வேலைவாய்ப்பு தர வேண்டும்.
   பாண்டெக்ஸ் நிறுவனத்துக்கு நிரந்தர மேலாண்மை இயக்குநரை நியமிக்க வேண்டும், நிலுவையில் உள்ள ஊதிய முரண்பாடு, தொகுப்பூதிய ஊழியர் பணிநிரந்தரம், போன்றவற்றை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செயலாளர் கே.செல்வராஜ் வரவேற்றார். சிஐடியு துணைச் செயலர் ஆர்.ராஜாங்கம் தலைமை வகித்தார்.
   கெüரவத் தலைவர் டி.முருகன் சிறப்புரை ஆற்றினார். துணைத் தலைவர் கே.மகாராஜா நன்றி கூறினார். ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai