சுடச்சுட

    

    புதுச்சேரி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்த வாக்காளர்கள் 7,76,483

    By  புதுச்சேரி,  |   Published on : 16th September 2016 10:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சத்யேந்திர சிங் துர்சாவத் வியாழக்கிழமை வெளியிட்டார்.
    இதன்படி மொத்தம் 7.76,483 வாக்காளர்கள் உள்ளனர்.
    1.1.2017ஐ தகுதி நாளாக கொண்டு, புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்யும் பணி செப்டம்பர் 15-ல் தொடங்கி வரும் அக்டோபர் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது.
    இதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி நிர்வாகிகளின் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் சத்யேந்திர சிங் துர்சாவத் வியாழக்கிழமை வெளியிட்டு, அதன் நகலை வழங்கினார்.
    இதில், என்ஆர் காங்கிரஸ் பொருளாளர் வேல்முருகன், காங்கிரஸ் பொதுச்
    செயலாளர் சிவசாமி, திமுக தொகுதிச் செயலாளர் முரளிதரன், அதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் அந்துவான், இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கீதநாதன், பாஜக செயலாளர் முருகன் பங்கேற்றனர்.
    இந்த வக்காளர் பட்டியலின்படி, புதுச்சேரி மாவட்டத்தில் மொத்தம் 7,76,484 வாக்காளர்கள் (ஆண் - 3,69,461, பெண் - 4,06,963, மூன்றாம் இனம் - 60) உள்ளனர்.
    வாக்காளர் பட்டியல் அந்தந்த தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும்.
    அப்போது பொதுமக்கள் தங்களது பெயர்களை சரி பார்த்து, திருத்தம் ஏதும் இருப்பின் செய்துகொள்ளலாம். இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
    வாக்காளர் பட்டியலை www.ceopuducherry.py.gov.in என்ற இணைய தளத்திலும் காணலாம்.
    குடிநீர் பாட்டிலால் சர்ச்சை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு தனியார் நிறுவனம் தயாரித்த குடிநீர் பாட்டீல் வழங்கப்பட்டது.
    அந்தக் குடிநீர் நாற்றம் வீசிய நிலையில் தரமற்று இருந்தது. மேலும்,
    குடிநீர் பாட்டில் எப்போது தயாரிக்கப்பட்டு, அதன் காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்கள் இல்லாமல் ஐஎஸ்ஐ முத்திரையுடன் இருந்தது.
    இதுகுறித்து, ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

    குடிநீர் பாட்டிலால் சர்ச்சை
    வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு தனியார் நிறுவனம் தயாரித்த குடிநீர் பாட்டீல் வழங்கப்பட்டது.
    அந்தக் குடிநீர் நாற்றம் வீசிய நிலையில் தரமற்று இருந்தது. மேலும்,
    குடிநீர் பாட்டில் எப்போது தயாரிக்கப்பட்டு, அதன் காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்கள் இல்லாமல் ஐஎஸ்ஐ முத்திரையுடன் இருந்தது.  
    இதுகுறித்து, ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

     

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai