சுடச்சுட

  

  மத்திய அமைச்சர்களுடன் முதல்வர் சந்திப்பு

  By புதுச்சேரி,  |   Published on : 16th September 2016 11:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுதில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்பட பல்வேறு அமைச்சர்களை வியாழக்கிழமை சந்தித்த புதுவை முதல்வர் நாராயணசாமி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினார்.

   அரசுமுறை பயணமாக புதுதில்லி சென்றுள்ள முதல்வர் நாராயணசாமி முதலில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்து 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி அரசு ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை வழங்க நிதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், 14-ஆவது நிதிக் குழுவில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஓர் உறுப்பு மாநிலமாக சேர்க்கப்படாததால், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது என்றும், அதனால் புதுச்சேரி அரசு பெற்ற பழைய கடன் ரூ.2,177 கோடியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் நிதியமைச்சரிடம் வலியுறுத்தினார்.
   முதல்வரின் கோரிக்கைகளை கேட்ட மத்திய நிதி அமைச்சர், புதுச்சேரி அரசின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக ஒப்புதல் அளித்துள்ளார். பின்னர், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த நாராயணசாமி, பொலிவுறு நகரத் திட்டத்தில் புதுச்சேரியை சேர்க்க வேண்டும் என்றும், புதுச்சேரியில் பிரான்ஸ் அரசின் நிதியுதவியுடன் ரூ.2,120 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ள குடிநீர் மற்றும் புதை சாக்கடைத் திட்டங்களைச் செயல்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இக்கோரிக்கைகளை உடனே பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உள்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai