சுடச்சுட

    

    இந்திய கடலோரக் காவல்படை புதுச்சேரி மாவட்டத் தலைமையகம் சார்பில் சர்வதேச கடலோர தூய்மை தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
    சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், கடலோரம் மாசுபடுவதைத் தடுக்கும் சர்வதேச கடலோர தூய்மை தினம் செப்டம்பர் 17-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய கடலோரக் காவல்படை, உள்ளாட்சித்துறை, என்எஸ்எஸ் மற்றும் புதுச்சேரி கடலோர மேலாண்மை ஆணையம் இணைந்து புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் தூய்மைப் பணியை மேற்கொள்கின்றன.
    துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு கடற்கரை காந்தி சிலை அருகே தூய்மைப்பணியைத் தொடங்கி வைக்கிறார். கடலோரக்காவல்படை டிஐஜி எஸ்சி.தியாகி, உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
    இப்பணியில் கல்லூரி மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர், என்சிசி, என்எஸ்எஸ் வீரர்களும் பங்கேற்கின்றனர். இத்தகவலை கடலோரக்காவல்படை துணை கமாண்டன்ட் உத்கர்ஷ் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai