சுடச்சுட

  

  புதுவையில் கடன் பிரச்னை காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை சம்பவத்தில், உறவினர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
  புதுவை லாஸ்பேட்டை செல்லபெருமாள்பேட்டை சீனிவாச கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் மணிகண்டன் (35). நிதி நிறுவனம் நடத்தி வந்த இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு டிராவல்ஸ் நிறுவனம் தொடங்கி நடத்தி வந்தார். இவர் 4 மாதங்களுக்கு முன்பு செளந்தர்யா என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.
  இந்த நிலையில் மணிகண்டன் வியாழக்கிழமை இரவு வீட்டில் இருந்தபோது 6 பேர் கும்பல் ஆயுதங்களுடன் அவரை தாக்கியது. அங்கிருந்து தப்பிய மணிகண்டனை துரத்திச் சென்ற கும்பல், சரமாரியாக வெட்டிக் கொன்றது. கொலை தொடர்பாக அமைக்கப்பட்ட 2 தனிப்படையினர், மணிகண்டனின் உறவினரான புஷ்பராஜ் (20) உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.
  சில ஆண்டுகளுக்கு முன்பு டிராவல்ஸ் நிறுவனத்தை தொடங்கிய மணிகண்டன், இதற்காக சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் கடனை திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்தாராம். இதுகுறித்து கடன் கொடுத்தவர்கள் புஷ்பராஜிடம் தெரிவித்துள்ளார். அவர் சென்று கேட்டபோது, மணிகண்டன் அவரை அலட்சியப்படுத்தியதாகத் தெரிகிறது.
  இதனால் ஆத்திரமடைந்த புஷ்பராஜ், 6 பேருடன் சென்று மணிகண்டனை வெட்டிக் கொன்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai