சுடச்சுட

    

    காரைக்காலிலும் வானொலி மூலம் ஜிப்மர் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி

    By DIN  |   Published on : 17th September 2016 09:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்கால் மற்றும் அதன் தமிழக சுற்றுப்புற பகுதிகளிலும் அகில இந்திய வானொலி மூலம் ஜிப்மர் மருத்துவமனை சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தவுளளது.
    இதன் மூலம் ஒவ்வொரு வியாழக்கிழமை காலை 6.45 மணி முதல் 7 மணி வரை ரெயின்போ 102.8 என்ற அலைவரிசையிலும் மற்றும் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் 8.45 மணி வரை அனைத்திந்திய வானொலி நேரடி அலைவரிசை 1215-லும் ஜிப்மர் மருத்துவர்கள் பல்வேறு மருத்துவ விழிப்புணர்வு செய்திகளை பகிர்ந்து கொள்கின்றனர்.
    தற்போது இதன் விரிவாக்கமாக காரைக்கால் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தமிழக மாவட்டங்களில் அனைத்திந்திய வானொலி மூலம் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி துவங்கப்பட்டுள்ளது. இதை ஜிப்மர் இயக்குநர் டாக்டர் சுபாஷ் சந்திர பரிஜா வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.  இதுகுறித்து இயக்குநர் பரிஜா கூறியது: வானொலி மூலம் இதுவரை சர்க்கரை வியாதி, குழந்தைகள் நோய்த் தடுப்பு, கருப்பை புற்றுநோய் தடுப்பு, காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியது என்ன, ஆஸ்துமா போன்ற தலைப்புகளில் விளக்கங்கள் அளிக்கப்பட்டது. தற்போது மஞ்சள் காமாலை, ரத்தக்கொதிப்பு, பால்வினை நோய்கள் போன்றவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார் பரிஜா.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai