சுடச்சுட

  

  பதவி விலகிய ஜான்குமாருக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் நன்றி

  By DIN  |   Published on : 17th September 2016 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முதல்வர் நாராயணசாமி இடைத்தேர்தலில் போட்டியிட ஏதுவாக, எம்எல்ஏ பதவியிலிருந்து விலகிய ஜான்குமாரை, காங்கிரஸ் நிர்வாகிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
  நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நின்று வெற்றி பெற்று முதல்வரின் நாடாளுமன்ற செயலராக இருந்த ஜான்குமார், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
  இதற்காக காங்கிரஸ் நிர்வாகிகள் அவருக்கு வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் தேவதாஸ் தலைமையில் பொதுச்செயலர் சிவசாமி, செயலர்கள் திருமுருகன், விநாயகம், பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் மணி, குமரன், கோவிந்தராஜ், முத்தழகன், மங்கலம் தொகுதி வட்டார காங்கிரஸ் தலைவர் முரளி, வக்கீல் பிரிவுத் தலைவர் மருதுபாண்டியன், வெற்றி வீரமணி, முன்னாள் கவுன்சிலர் கோர்க்காடு வீரமுத்து, வட்டார காங்கிரஸ் பொதுச் செயலர் விநாயக முதலியார், ராஜ்பவன் வட்டார் காங்கிரஸ் பொதுச் செயலர் ராதாகிருஷ்ணன், மணவெளி தொகுதி வட்டார காங்கிரஸ் பொதுச் செயலர் அன்பு, ஞானவேல், குமாரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai