சுடச்சுட

  

  புதுச்சேரியில் இன்று மெகா லோன் மேளா தொடக்கம்: ரூ.100 கோடி கடன் வழங்க இந்தியன் வங்கி இலக்கு

  By DIN  |   Published on : 17th September 2016 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி மண்டலம், இந்தியன் வங்கி சார்பில் மெகா லோன் மேளா சனி, ஞாயிறு ஆகிய 2 நாள்கள் நடைபெறுகிறது. மொத்தம் ரூ.100 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மண்டல துணைப் பொதுமேலாளர் டி.தேவராஜ் தெரிவித்தார்.
  புதுச்சேரியில் அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: புதுச்சேரியில் முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி, ஆண்டுதோறும் கடன் திட்ட இலக்கை தவறாமல் அடைந்து வருகிறது.
  புதுச்சேரி மாநிலம், விழுப்புரம் மாவட்டம் அடங்கிய புதுச்சேரி மண்டலத்தில் இந்தியன் வங்கிக்கு 65 கிளைகள் உள்ளன. புதுவையில் மட்டும் 34 கிளைகள் உள்ளன. இக்கிளைகள் மூலம் ரூ.2,500 கோடிக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.3ஆயிரம் கோடி அளவுக்கு டெபாசிட் திரட்டப்பட்டுள்ளது.
  தற்போது சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள், எழுந்து நில் இந்தியா, பிரதமரின் முத்ரா கடன் திட்டம், வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன்கள் அதிகளவு வழங்க இந்தியன் வங்கி திட்டமிட்டுள்ளது. இதற்காக மெகா லோன் மேளா நடத்தப்படுகிறது.
  புதுச்சேரியில் லாஸ்பேட்டை பார்வதி திருமண மண்டபத்தில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாள்கள் லோன் மேளா நடத்தப்படு
  கிறது.
  மேலும் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, காரைக்கால் பகுதிகளிலும் லோன் மேளா நடத்தப்படும். குறிப்பாக முறையான ஆவணங்களுடன் கடனுக்காக விண்ணப்பித்தால், 24 மணி நேரத்தில் கடன் அனுமதி தரப்படும்.
  புதிய ஏடிஎம் மையங்கள்: சேலியமேட்டில் புதிதாக ஏடிஎம் வசதியுடன் கிளை திறக்கப்படுகிறது. அதே போல வில்லியனூர், அரும்பார்த்தபுரம், ஆசூர் பகுதிகளிலும் ஏடிஎம் மையங்கள் திறக்கப்பட உள்ளன.
  முதியோர் ஒய்வூதியம்:  முதியோரின் வீடுகளுக்கே சென்று ஓய்வூதியத் தொகையை வழங்க புதிதாக நகர்ப்புறத்துக்கு என 17 வணிகத் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
  ஏற்கெனவே 40 வணிகத் தொடர்பாளர்கள் பணியில் உள்ளனர் என்றார் தேவராஜ்.
  மண்டல துணை மேலாளர் சங்கரநாராயணன், முன்னோடி வங்கி மேலாளர் அன்புகாமராஜ் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai