Enable Javscript for better performance
பூட்டிய வீட்டுக்குள் குண்டு வெடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பூட்டிய வீட்டுக்குள் குண்டு வெடிப்பு

    By DIN  |   Published on : 17th September 2016 08:59 AM  |   அ+அ அ-   |    |  

    புதுச்சேரியில் பூட்டிய வீட்டுக்குள் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
    புதுச்சேரி முதலியார்பேட்டை லட்சுமி நகர் சுந்தராஜி வீதியில் ராதா என்பவருக்கு சொந்தமான பூட்டிய வீடு உள்ளது. அந்த வீட்டில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு பயங்கர வெடிச்சப்தம் கேட்டது. இதையடுத்து அங்கு திரண்ட அப்பகுதியினர் இது குறித்து தெரிவித்த தகவலின்பேரில் முதலியார்பேட்டை போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.   விசாரணையில், ராதா என்பவருக்குச் சொந்தமான அந்த வீடு இடிந்து விழுந்துள்ளது. தனது கணவர் இறந்துவிட்ட நிலையில், ராதா தனது இரு மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.   வீடு சேதமடைந்ததால்  ராதா அந்தவீட்டை பூட்டிவிட்டு, தியாகிகள் நகரில் வாடகை வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
    இதனை அறிந்த மர்ம கும்பல், ராதாவின் வீட்டினுள் இரவு நேரத்தில் சென்று நாட்டு வெடிகுண்டு தயாரித்து வந்திருப்பது, தெரியவந்துள்ளது.
    சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதியினர் கூறுகையில், "வெடிச்சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தோம். ஒரே புகைமூட்டமாக இருந்தது என்றனர்.
    இந்த விபத்தில் யாரும் இறந்ததாக தகவல் இல்லை. ஆனால், வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்ட ஒருவர் ரத்தம் வழிய அங்கிருந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
    குண்டு வெடிப்பு தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    kattana sevai