சுடச்சுட

  
  acupuncture

  புதுவையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அக்குபஞ்சர் சிகிச்சையை அறிமுகப்படுத்தும் முயற்சியில் புதுவை அரசு ஈடுபட்டுள்ளது.

  புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அக்குபஞ்சர் சிகிச்சை குறித்த கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய அக்குபஞ்சர் சிகிச்சை சொசைட்டியின் தலைவர் ராமன் கபூர் பங்கேற்றுப் பேசினார்.

  அப்போது அவர் கூறியது: இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மாற்று மருத்துவ முறையாக அக்குபஞ்சர் சிகிச்சையை அறிமுகப்படுத்த வேண்டும். இதன் மூலம் சாதாரண மக்களுக்கும் இந்த சிகிச்சையின் பலன் சென்றடையும்.
  ஆங்கில மருத்துவ முறையின் மூலம் குணப்படுத்த முடியாத நோய்களுக்கு அக்குபஞ்சர் முறையில் தீர்வு காணலாம்.

  பல் மருத்துவர்களும் உடற்கூறுவியல் நிபுணர்களும் அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்க மத்திய சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்திய அக்குபஞ்சர் சிகிச்சை சொசைட்டி மருத்துவர்கள் ஆண்டுக்கு 30 நாள்கள் புதுவைக்கு வந்து அக்குபஞ்சர் சிகிச்சை அளிப்பார்கள்
  என்றார்.

  இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதுவை சுகாதார இயக்குநர் ராமனிடம் கேட்டபோது, அரசு மருத்துவமனைகளில் அக்குபஞ்சர் சிகிச்சையை அறிமுகப்படுத்த, இந்திய மருத்துவ முறை மருத்துவர்கள், தேசிய கிராமப்புற சுகாதார இயக்க மருத்துவர்கள், உடற்கூறுவியல் நிபுணர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai