சுடச்சுட

  

  கழிவுநீரை வாய்க்காலில் வெளியேற்றினால் நடவடிக்கை: உழவர்கரை நகராட்சி

  By DIN  |   Published on : 18th September 2016 03:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதை சாக்கடை குழாய் இருந்தும் இணைப்பு தராமல் கழிவுகளை வாய்க்காலில் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உழவர்கரை நகராட்சி எச்சரித்துள்ளது.
  அதன் ஆணையர் எம்.எஸ்.ரமேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  பருவமழையை எதிர்கொள்ள நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எல் மற்றும் யு வடிவ கால்வாய்களை தூர்வாரும் பணி நடந்து வருகிறது.
  கடந்த ஆண்டு புதுச்சேரியில் பெய்த பெருமழையால் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பலர் தங்கள் வீட்டுக் கழிவுகளை கால்வாய்களில் விட்டதால் கழிவுகள் நீரில் மிதந்து சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டது.
  கழிவுகளை கால்வாயில் விடுவது குற்ற நடவடிக்கைக்குரிய செயலாகும்.
  பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் குடியிருப்போர் கழிவுகளை எல் மற்றும் யு வடிவக் கால்வாய்களில் விட்டிருந்தால் 0413-2201142 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் ரமேஷ்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai