சுடச்சுட

  

  காரைக்கால் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியில் கடலோரக் காவல் படையினர்

  By DIN  |   Published on : 18th September 2016 03:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்திய கடலோரக் காவல் மையம் சார்பில் சனிக்கிழமை நடந்த காரைக்கால் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியில் கடலோரக் காவல் படையினர், என்.எஸ்.எஸ். மாணவர்கள் உள்ளிட்ட 300 பேர் கலந்துகொண்டனர்.
  சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தையொட்டி இப்பணி சனிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் மையத்தின் கமான்டண்ட் எஸ்.என்.எம்.பட்நாயக் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் (பொ) ஆர்.கேசவன் பணிகளை தொடங்கிவைத்தார்.
  இந்திய கடலோரக் காவல் படையினருடன், என்.எஸ்.எஸ்., என்.சி.சி, மற்றும் அரசு, தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்கள், காரைக்கால் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 300 பேர் இப்பணியில் ஈடுபட்டனர்.
  காரைக்கால் கடற்கரையில் கிடந்த குப்பைகளை இவர்கள் அகற்றினர். கடற்கரை தூய்மையாக வைத்திருக்கும்போது, சுற்றுச்சூழல் மாசடைவதை கணிசமாகத் தடுக்கமுடியும். கழிவுகளின்றி கடலோரப் பகுதியை காக்கும்போது, கடற்கரையிலிருந்து வரும் காற்று உயிரினங்களுக்கு சுகாதாரத்தைத் தரும். பொழுதுபோக்குக்காக கடற்கரைக்கு வருவோரும், கடலோரப் பகுதியில் வசிப்போரும், கடற்கரையை மிகவும் சுத்தமாக வைத்திருக்க முன்வரவேண்டுமென கமான்டண்ட் பட்நாயக் கேட்டுக்கொண்டார்.
  நிகழ்ச்சியில் காரைக்கால் நகராட்சி ஆணையர் என்.காந்திராஜன், மீன்வளத் துறை உதவி இயக்குநர் நடேசப்பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai