Enable Javscript for better performance
சமுதாய நலப்பணித் திட்டம் சார்பில் ரத்ததானம்- Dinamani

சுடச்சுட

    

    சமுதாய நலப்பணித் திட்டம் சார்பில் ரத்ததானம்

    By DIN  |   Published on : 18th September 2016 03:33 AM  |   அ+அ அ-   |    |  

    காரைக்காலில் சமுதாய நலப்பணித் திட்டம் சார்பில் அரசு பொதுமருத்துவமனையில் ரத்ததான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் 25 தன்னார்வலர்கள் ரத்ததானம் செய்தனர்.
    காரைக்கால் சமுதாய நலப்பணித் திட்டம் சார்பில் இம்முகாம் அரசு பொதுமருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்றது. அரசு பொதுமருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் பி.சித்ரா தலைமை வகித்தார்.
    மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி பி.உதயக்குமார், சமுதாய நலப் பணித் திட்ட காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.முருகன் ஆகியோர் முன்னிலையில் காரைக்காலில் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 25 பேர் ரத்ததானம் செய்தனர்.
    ரத்ததானம் செய்வதன் மூலம் தன்னார்வலர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான ஆரோக்கியம், தானம் பெறுவோரின் நல்வாழ்வு குறித்து பேசிய மருத்துவர்கள், ரத்ததானம் செய்யும் விழிப்புணர்வை மேலும் ஏற்படுத்தவேண்டியது அனைவரின் பொறுப்பாகும் என்றனர்.
    சமுதாய நலப்பணித் திட்ட அலுவலர் கே.வினோத், மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai