சுடச்சுட

  

  சிறு உதவியும் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்: நீதிபதி ஜெயச்சந்திரன்

  By DIN  |   Published on : 18th September 2016 03:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சமூகத்துக்கு செய்யும் சிறிய உதவியும் ஏதாவதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும்,
  புதுவை சட்டப் பணிகள் ஆணைய செயல் தலைவருமான எம்.ஜெயச்சந்திரன் பேசினார்.
  புதுவையில் உள்ள மனநல காப்பகங்கள் மற்றும் சிறப்புப் பள்ளிகளில் மாணவர்களுக்கு விளையாட்டு மற்றும் கலை போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
  மேலும், கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா புதுவை நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
  இதில், நீதிபதி ஜெயச்சந்திரன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். மேலும், புதுவை மத்திய சிறைக்கு தையல் இயந்திரம், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விபத்து காப்பீட்டுக்கான காசோலைகளையும் அவர் வழங்கினார்.
  அப்போது அவர் பேசியது: நாட்டில் உள்ள அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதில் சிறப்புக் குழந்தைகளும் அடங்குவார்கள். அதனால்தான் அவர்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில் இது போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
  இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும்.
  இதுபோன்ற சிரமத்தில் இருப்பவர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு நீதியை வழங்க வேண்டும். இந்தப் பணியை சட்டப்பணிகள் ஆணையம் செய்து வருகிறது.
  சமுதாயத்துக்கு சிறிய அளவில் உதவினாலும் அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நீதிக்காக ஏங்குவோருக்கு நீதியை நாம் வழங்க வேண்டும் என்றார்.
  நிகழ்ச்சியில் புதுவை தலைமை நீதிபதி சி.வி. கார்த்திகேயன், காரைக்கால் மாவட்ட நீதிபதி மார்கரேட் ரோசலின், சட்டத்துறைச் செயலர் ஜி.செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai