சுடச்சுட

  

  புதுவையில் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சைக்கிள் பேரணியை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சனிக்கிழமை மேற்கொண்டார்.
  புதுச்சேரி காவல் துறையில் ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சைக்கிள் வழங்கப்பட்டது. இந்த சைக்கிள் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தவும், பாதுகாப்பு மற்றும் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
  பேரணியை ஆளுநர் கிரண்பேடி தொடங்கி வைத்ததுடன் அதில் பங்கேற்றார். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தொடங்கிய இந்த பேரணி அஜந்தா சிக்னல், ராஜா தியேட்டர், அண்ணா சிலை, சின்ன மணிக்கூண்டு, ரயில் நிலையம், அம்பேத்கர் சாலை, கடலூர் சாலை, வெங்கடசுப்பா சிலை, மறைமலை அடிகள் சாலை, சுப்பையா சிலை, புஸ்ஸி வீதி வழியாக கடற்கரைச் சாலை காந்தி சிலை அருகில் நிறைவு பெற்றது.
  13 கி.மீ. தொலைவிலான இந்தப் பேரணியில் ஆளுநருடன் டிஜிபி சுனில்குமார் கௌதம், சீனியர் எஸ்.பி. ராஜீவ் ரஞ்சன், புதுச்சேரி நகராட்சி ஆணையர் சந்திரசேகர், உழவர்கரை நகராட்சி ஆணையர் ரமேஷ் உள்பட போலீஸார் பலர் கலந்து கொண்டனர்.
  பேரணி நிறைவில் ஆளுநர் கூறியதாவது: பொதுமக்கள் சாலைகளில் குப்பைகளை வீசக்கூடாது. வீடுகளிலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து துப்புரவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும். தூய்மை, பாதுகாப்பு இருந்தால்தான் புதுச்சேரி வளர்ச்சி பெறும் என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai