சுடச்சுட

  

  நிதி மோசடிப் புகார்: கல்வி அறக்கட்டளை நிர்வாகியிடம் போலீஸார் விசாரணை

  By DIN  |   Published on : 18th September 2016 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்காலில் நிதி மோசடியில் கைதாகி சிறையிலிருந்த கல்வி அறக்கட்டளை நிர்வாகியை போலீஸார் காவலில் எடுத்து, விசாரணை நடத்தினர்.
  காரைக்கால் காமராஜர் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் அமைப்பு நடத்திவருபவர் ஜீவானந்தம். கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்சந்தை பகுதி காரங்காடு கிராமத்தை சேர்ந்த சண்முகம், ஜீவானந்தத்திடம் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்ததாக குமரி மாவட்ட போலீஸாரிடம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, காரைக்காலுக்கு கடந்த ஆக.8-ஆம் தேதி வந்த போலீஸார், ஜீவானந்தத்தை கைது செய்து அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
  இதுகுறித்து தகவல் வெளியான நிலையில், நெடுங்காடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார், காரைக்கால் பகுதியை சேர்ந்த பெரியார்அன்பு, வேலங்குடியை சேர்ந்த வாசுதேவன் உள்ளிட்ட 15 பேர், தங்களிடமும், மத்திய அரசிடமிருந்தும், மாநில அரசிடமிருந்தும் மானியத்துடன் தொழிலுக்கு நிதியுதவி பெற்றுத்தருவதாக கூறி, பல லட்சம் ரூபாயை ஜீவானந்தம் ஏமாற்றிவிட்டதாக, காரைக்கால் மாவட்ட சார்பு ஆட்சியர் ஆர்.கேசவனிடம் புகார் தெரிவித்தனர்.
  இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் புகாரின் பேரில் காரைக்கால், கோட்டுச்சேரி, திருநள்ளாறு உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், தமிழக சிறையிலிருந்த ஜீவானந்தத்தை கடந்த 14-ஆம் தேதி அழைத்துவந்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த 2-ஆம் வகுப்பு குற்றவியல் நீதிபதி கலைவாணி, இவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
  நீதிமன்ற அனுமதியின்பேரில் 2 நாள் போலீஸ் காவலில் 15-ஆம் தேதி ஜீவானந்தத்தை அழைத்துச் சென்ற போலீஸார். கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் விசாரணை செய்தனர். மீண்டும் நீதிமன்றத்தில் சனிக்கிழமை அவரை ஆஜர்படுத்தி, காரைக்கால் கிளை சிறையில் அடைத்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai