சுடச்சுட

  

  பசுமையான காரைக்கால் உருவாக பொதுமக்கள் பங்களிப்பு அவசியம்: அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன்

  By DIN  |   Published on : 18th September 2016 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூய்மையான, பசுமையான காரைக்கால் உருவாவதற்கு பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் என புதுச்சேரி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் கூறினார்.
  காரைக்கால் மாவட்டம் தூய்மையான, மாவட்டமாக உருவெடுக்க மாணவர்களின் பங்களிப்புடன், ஒவ்வொரு சனிக்கிழமையும் துப்புரவு விழிப்புணர்வுப் பணி ஏற்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  5-ஆவது வாரமாக கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் தூய்மை விழிப்புணர்வுப் பணி கோட்டுச்சேரி பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.
  சர்வைட் உயர்நிலைப் பள்ளி அருகே பள்ளி மாணவர்கள், காரைக்கால் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் பங்களிப்புடன் தூய்மைப் பணியை புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தொடங்கிவைத்தார். நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சி.சந்திரபிரியங்கா, மாவட்ட ஆட்சியர் (பொ) ஆர்.கேசவன், வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் கே.குணசேகரன், காரைக்கால் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் டி.சந்தனசாமி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜான்அரேலியஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
  துப்புரவுப் பணி நிறைவின்போது, மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே பேசிய அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், காரைக்கால் மாவட்டம் தூய்மையானதாக, பசுமையானதாக உருவெடுக்க இதுபோன்ற துப்புரவு விழிப்புணர்வுப் பணியை அரசு நிர்வாகம் செய்துவருகிறது. அமைச்சரும், எம்.எல்.ஏ., அதிகாரிகள் அனைவரும் இதுபோன்ற துப்புரவுப் பணியில் தீவிரமாக ஈடுபடும்போது, இங்கு இருப்போரிடையே குப்பைகளை எந்த வகையில் கையாளுவது என்ற எண்ணம் தோன்றும். மேலும் காரைக்காலில் திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இது செயல்பாட்டுக்கு வரும்போது, மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai