சுடச்சுட

  

  பிரதமர் நரேந்திரமோடி பிறந்த நாள்: பாஜகவினர் கொண்டாட்டம்

  By DIN  |   Published on : 18th September 2016 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாளை காரைக்காலில் பாஜகவினர் மரக்கன்றுகள் நட்டு, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
  பிரதமர் நரேந்திரமோடியின் 66-ஆவது பிறந்த நாளை காரைக்கால் மாவட்ட பாஜகவினர் சனிக்கிழமை கொண்டாடினர். மாவட்டத் தலைவர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் தலைமையில் காரைக்கால் பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நெடுங்காடு பகுதியில் பாஜக இளைஞரணி சார்பில் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. அக்கரைவட்டம் கிராமத்தில் 7 பேருக்கு மத்திய அரசு கொண்டுவந்த செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் தலா ரூ.1000 செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் மாநில, மாவட்ட, தொகுதி நிலையிலான பல்வேறு பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai