சுடச்சுட

    

    புரட்டாசி முதல் சனி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

    By DIN  |   Published on : 18th September 2016 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை அடுத்து புதுவையில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை நோக்கி விரதமிருப்பது வழக்கம். அந்த நாள்களில் பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். அதன்படி, புரட்டாசி முதல் சனிக்கிழமையை அடுத்து புதுவையில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
    காந்தி வீதி வரதராஜ பெருமாள் கோயில், பாகூர் மதிகிருஷ்ணாபுரம் பட்டாபிராமர் கோயில் போன்ற கோயில்களில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
    இதேபோல, வில்லியனூர் தென்கலை வரதராஜ பெருமாள் கோயில், கூடப்பாக்கம் சீனுவாச பெருமாள் கோயில், பாகூர் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில், வீராம்பட்டினம் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    இந்த சிறப்புப் பூஜைகளில் திரளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai